செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இரண்டாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது.
நீல நிற புத்தக பையுடன் காணப்பட்ட சிறிய பிள்ளையுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சத்தோடு சேர்த்து Bata பிராண்ட் சப்பாத்து ஒன்றும் பொம்மை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்படுள்ளது.
இன்று மேலும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளது. இவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் எண்ணிக்கையை கணிப்பிடுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.இதுவரை 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
