இன்று இரவு 8.40 மணிக்கு மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்த இரு பொலிசார் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை காண்பித்து நாளைக் காலை மட்டக ளப்பு தலைமைப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் விசாரணை ஒன்றிற்காக வருமாறு தெரிவித்து
சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றினைக் கான்பித்தனர். கடிதமானது சிங்களத்தில் உள்ள காரணத்தினால் தனக்கு தமிழில் கடிதத்தினை தருவதற்கு ஆவண செய்யுமாறு கூறி திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த 19.04.2025 அன்று நினைவு கூறப்பட்ட அன்னை பூபதி அவர்களின் ஞாபகாத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட் டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் உட்பட மூன்று நபர்களுக்கு சந்திவெளி பொலிஸ்
காத்தான்குடி பொலிஸ்
கொக்குவில் பொலிஸ்
மட்டக்களப்பு பொலிஸ் என நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூலம் சென்ற 19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவு தின ஞாபகாத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் மூன்று பேருக்கும் எதிராக தடை மேற்படி நான்கு பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகள் மூலம் தடை உத்தரவு பெறப் பட்டிருந்தது.
மேற்படி நீதிமன்ற தடையுத்தரவானது பொலிசார் வேண்டுமென்றே தனக்கு எதிராக பெறப்பட்ட தடையுத்தரவு இது தனது அடிப்படை மனித உரிமை சுதந்திரத்தை மீறும் செயலாக உள்ளதென தெரிவித்து மேற்படி நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பாளர்களுக்கு எதிராக கடந்த 21.04.2025 அன்று மட்டக் களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட் டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் மூலம் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந் நிலையில் சென்ற 11.06.2025 அன்று இரவு 9.20 மணியளவில் வீட்டிற்கு வந்த கொக்குவில் பொலிசார் மட்டக்ளப்பு தலைமை உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு 13.06.2025 அன்று விசா ரணையொன்றிற்காக வருமாறு கடிதம் ஒன்றினை வழங்கிச் சென்றனர்.
அழைப்பாணைக்கு அமைய அன்றைய தினம் அதாவது 13.06.2025 அன்று தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் சென்று தனக்கு நடந்த அநீதிகள் தொடர்பாக நேரடியாக தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபரிடம் தனது வாக்கு மூலத்தினை வழங்கியிருந்தார்.
இந் நிலையில் சென்ற 26.06.2025 மற்றும் 01.07.2025 ஆகிய தினங்களில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பொலிசார் தான் மட்டக்களப்பு தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இருந்து கதைப்பதாகவும், தான் சென்ற 13.06.2025 அன்று வழங்கிய வாய் மூல வாக்கு மூலத்தில் கையெழுத்து வைக்கவேண்டும் மீண்டு்ம் காரியாலயம் வருமாறு அழைக்கப் பட்டார்.
அதற்கு பதிலிக்கையில் தான் கையெழுத்து வைக்க முடியாது வர முடியாது என கூறியதுடன் உங்களுடைய நியாயத் தினை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அதன் மூலமான விளக்கத்தினை அவர்கள் தனக்கு அனுப்பி வைப்பார்கள் என கூறியதாக தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று இரவு 11.07.2025
08.40 மணிக்கு தனது வீட்டிற்கு வருகை தந்த மட்டக்களப்பு கொக்குவில் பொலிசார் நாளைக் காலை 12.07.2025 தலைமை உதவிபொலிஸ்மா அதிபர் காரியாலயம் வருமாறு சிங்களக் கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு முற்பட்டனர்.
சிங்களம் தனக்கு தெரியாது என்ற காரணத்தை கூறியதுடன் இது தனக்கு இருக்கும் மெழி உரிமையையும் மீறும் செயல் எனக்கூறி சிங்களக் கடிதத்தினை வாங்க மறுத்ததையடுத்து வந்த இரு பொலிசாரும் திரும்பிச் சென்றனர்.
எனவே அடிக்கடி பொலிசாரின் வருகை மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகள் என்பன தன்னையும் தனது குடும்பத்தாரை யும் வெகுவாக பாதிக்கும் செயற்பாடாக அமைவதுடன் சுற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளது. எக் கூறி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.
