வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொட ர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்காவின் அரச புலனாய்வாளர்கள் மற்றும் காவல்த் துறையினரால் நடாத்தப் பட்டு வரும் சட்டத்துக்குப் புறம்பான அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் , விசாரணைகள் தொடர்பில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த சர்வதேச மனித உரிமைகள் கண்காணி ப்பகம் தெற்காசியா பொறுப்பாளர் ரொம் வெல் { Tom bell Human Rights woch }அவர்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயேகநாதன் அவர்கள் மேற்படிப் பிரச்சணைகள் தொடர்பில் எடுத்துக் கூறினார்.
அத்துடன் இனங்களூக்கிடையே முறன்பாடுகளை ஏற்படு த்தும் முகமாக நடை பெறும் காணிப் பிரச்சணைகள், தொடர்ச்சியாக மக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய காணிகளில் அத்துமீறி நடக்கும் வனவளத் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள்.
நினைவேந்தல்களை நடாத்துவதற்கு பொலிசார் ஏற்படுத்தும் நீதி மன்ற தடையுத்தரவுகள் மோன்ற பலவிடயங்கள் கலந்துரையாடப் பட்டது.
