வங்காளதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், இன்று (21) வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில் விபத்துக்குளானதில் 19 பேர் பலியானதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவின் வட பகுதியிலுள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நேரப்படி பகல் 1.06 மணிக்கு F-7 BGI என்ற சீன தயாரிப்பு விமானம் புறப்பட்டு சுமார் 25 நிமிடங்கள் கழித்து விபத்துக்குள்ளானது.
மதிய உணவு இடைவேளையின் போதே விமானம் பாடசாலை உணவகத்தின் கூரை மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கு மாணவர்கள் பலர் இருந்துள்ளனர். விமான விபத்தை தொடர்ந்து அப்பகுதி தீப்பற்றி புகை மண்டலமாக காட்சிளித்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்து நடந்த சமயத்தில் கல்லூரியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விமான விபத்து பெரும் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது.
