திருகோணமலை ஸ்ரீ மலை நீலியம்மன் கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் “பாசன பப்பாத ராஜமஹா விகாரை” என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்
திருகோணமலை முகத்துவாராம் பிரதேசத்தில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவிலை அழித்து அந்த கோவில் சூழலில் “லங்கா பட்டுன சமுத்திரகிரி” என்கிற பெயரில் விகாரை ஒன்றை கட்டி இருக்கின்றார்கள்
காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலய சூழலில் “கெமுனு விகாரை” என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்
முல்ல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை உடைத்து வீசிவிட்டு அங்கு “குறுந்தூர் விகாரை” என்கின்ற பெயரில் விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி “குருகந்த புராண ராஜ மகா விகாரை” என்கின்ற பேரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்
வவுனியா வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விக்கிரங்களை சேதப்படுத்தி அது “வட்டமான பர்வத விகாரை” என்கின்ற பௌத்த தொல்லியல் நிலம் என உரிமை கோருகின்றார்கள்
தென்னவன்மரபடி கந்தசாமி மலை முருகன் ஆலய பூசை வழிபாடுகளை தடை செய்து விட்டு அது “சங்கமலை விகாரை” க்குரிய நிலம் என உரிமை கோருகின்றார்கள்
திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலயத்தை சிதைத்து விட்டு அங்கு “கொட்டியாராம ஸ்ரீ பத்ர தாது ராஜ மகா விகாரை” என்கின்ற பெயரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்
திருகோணமலை சூடைக்குடா மலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை அழித்து அங்கும் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் பாரம்பரிய முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பவற்றை அடித்து நொருக்கியிருக்கின்றார்கள்
வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பனவற்றை சேதப்படுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் .
இவ்வாறு தொடரும் அட்டூழியங்களின் போதெல்லாம் பாதிக்கப்படாத இன நல்லிணக்கம் தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற கோரும் போது மட்டும் ஏற்படுகின்றது என ஜேவிபி அமைச்சர் திரு சந்திரசேகரன் சொல்லுகின்றார்
சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற கோருவதை இனவாதம் என எந்த கூச்சமுமில்லாமல் சித்தரிக்கின்றார்
ஊழல் பற்றி வாய் கிழிய பேசும் ஜேவிபி திரு சந்திரசேகர் சட்டவிரோத கட்டுமாணமான தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எவ்வாறு பௌத்த சாசன அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்தது என்பது பற்றி பேச மறுக்கின்றார்
இது போதாதென்று தையிட்டி திஸ்ஸ விகாரை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட பொது அதிகாரத்திலிருந்த ஆட்சியாளர்களின் பங்காளியாக ஜேவிபி இருந்ததை கூட மறந்து விடுகின்றார்
ஒருங்கிணைப்பு குழு தலைவராகவிருக்கும் திரு சந்திரசேகர் தையிட்டி தூபி (Stupa) கான அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டாம் நாளிலேயே அப்போதைய ஒருங்கிணைப்பு குழு கட்டுமானத்திற்கு தடை விதித்ததை மறைத்து விட்டு கட்டும் போது ஏன் கேட்கவில்லை என அரசியல் செய்கின்றார்
உலகம் ஐந்தாவது தொழில்துறைப் புரட்சி காலத்தில் நுழைந்துவிட்டது. ஆனால், இன்னும் இரண்டாவது தொழில்துறைப் புரட்சி காலத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் இலங்கை தீவின் அமைச்சரான ஜேவிபி சந்திரசேகரனுக்கு , முன்னேற்றம் மற்றும் ஊழலற்ற சமூக அமைப்பை உருவாக்க குறைந்தபட்ச சட்டத்தின் ஆட்சியின் அவசியம் என்பதை உணர முடியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
