தாயகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூங்கிலாறு பிரதேசத்தை உள்ளடக்கியதான மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் ஏற்பாட்டாளர் தலைமையில் ஆரம்பமாகியது. 16/11/2025 நோர்வே தமிழ் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது. இதில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது.
நினைவுரைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், மாவட்ட அமைப்பாளர், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் மதிப்பளிப்பு நிகழ்வின் முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நிகழ்த்தியதைத் தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மதியவிருந்துபசாரத்துடனும், நன்றியுரையுடனும் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.














