டந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குறித்த சந்தேகநபர் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
