நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்கு ஆசி வேண்டி சர்வமத வழிபாட்டு நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது.
இதன்போது இந்துமத வழிபாட்டு நிகழ்வு பம்பலப்பிட்டி வஜிர பிள்ளையார் கோவிலிலும், இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது.
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்ததில் முழுநாடுமே பாதிப்படுள்ளது. இந்த நிலையில், தற்போது பலவேறு நாடுகளும் உதவிகளை செய்த நிலையில், ஜனாதிபதி அனுரவின் வழிகாட்டலில் தற்போது மீள் கட்டமைப்பு பணிகள் மும்மரமாக முன்னெடுக்கப்படு வருகின்றது.
