புவியின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்பிரிக்காவில், வடகிழக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி ஒரு பெரிய பிளவு உருவாகி வருகிறதாகவும், இந்த எரிமலை காரணமக ஆபிரிக்க கண்டம் துண்டு துண்டாக உடையும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் எத்தியோப்பியாவின் கீழ், புவியின் ஆழமான அடுக்குகளில் இருந்து உருகிய பாறைகள் (molten rock) சீரான அலைகளாக எழுந்து வருவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வை ஸ்வான்சீ பல்கலைக்கழக (Swansea University) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த ‘துடிப்புகள்’ (pulses) படிப்படியாக ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிளவுபடுத்தி ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்தப் பிளவு இறுதியாக ஆப்பிரிக்கா முழுவதும் பரவும்” என்று ஆய்வின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் எம்மா வாட்ஸ் (Dr. Emma Watts) மெயில்ஆன்லைனிடம் (MailOnline) தெரிவித்தார்.
இது ஏற்கனவே தொடங்கிவிட்டது, இப்போது மெதுவான வேகத்தில் (ஆண்டிற்கு 5-16 மிமீ) பிளவின் வடக்குப் பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது,” என்று டாக்டர் வாட்ஸ் விளக்கினார்.
“காலவரிசையைப் பொறுத்தவரை, ஆப்பிரிக்கா பிளவுபடும் இந்தச் செயல்முறை முழுமையடைய பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்.” கண்டத்தட்டுகளின் நகர்வு மற்றும் புவியின் மையப்பகுதியிலிருந்து வெளியேறும் வெப்பமான பாறைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பிளவு ஏற்படுகிறது.
இது கிழக்கு ஆப்பிரிக்க பிளவு மண்டலம் (East African Rift System – EARS) என்று அழைக்கப்படும் புவியியல் அம்சத்தின் ஒரு பகுதியாகும். இந்த பிளவு முழுமையாகப் பிளவுபடும் போது, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி தனியான ஒரு கடற்கரையுடன், ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து தனித் தீவாகவோ அல்லது ஒரு புதிய கண்டமாகவோ உருவாகும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
இது உலக வரைபடத்தையே மாற்றி, புதிய சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கடல்சார் வாழ்விடங்களை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
