மூச்சிலும் நான் சுவாசிக்கும் காற்றிலும்
நேசிக்கும் என் தாய் மண்ணை விட்டு
புலத்தில் வாழ்வது தொடருகின்றது
என் மூச்சு நான் சுவாசித்த
என் தாய் மண்ணை நேசித்து திணறுகின்றது.
படபடக்கும் இதயத்தின் ஒவ்வெரு துடிப்பும்
என் தாய் மண்ணை
நான் நடந்து திரிந்த என் ஊர்
தாகத்தை தூண்டுகிறது .
என் உயிர் அடங்கி ஆவியாகு முன்
அன்னை மண்ணில் என் பாதம்
பதியுமா என்று தவிக்கின்றது.
எம் வலிகள் அறியாது எம் இனத்தை அழித்து
எம் வாழ்வைக்கொய்து அகதிகளாய்
ஆக்கிய கொடியபோரின் வலிகள் சுமந்து
என்னைப்போல் எத்தனை உள்ளங்கள் தவிக்கும்.
எம் இனத்தவர் வாழ்க்கையில்
வெறுமையுள்ள மனங்கள் ஆகி வாழ்ந்திடும் வாழ்வில்
எம் ஆவியும் புகலிடத்தில் அடங்கிடுமா ?
ஆக்கம் 20.11.2025 ,கவிதை கிறுக்கன் சுதேரா
