ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்.
(13.07.2017 -13.07.2025 )
ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு
தமிழீழ விடுதலையை உளமாற நேசித்து தனது மூச்சாக வாழ்ந்துவந்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழீழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
சுதந்திர தமிழீழமெனும் உண்ணத இலட்சியத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தளராத நிலைகொண்டு பக்கபலமாக செயலாற்றி வருகின்றது. அவ்வாறான பெருமைமிகு அத்தியாத்தில் என்றென்றும் மரியாதையுடன் நினைத்துப் பார்க்கும் உயர்ந்த மனிதராக வீரசந்தானம் ஐயா திகழ்வார் என்பது உறுதி.
நெஞ்சத்தில் இருக்கும் எண்ணங்களை தூரிகை கொண்டு உணர்வோடு படைப்புக்களாக்கி எழுச்சிமிகு தடம்பதித்த ஓவியர் வீரசந்தானம் ஐயா
