«கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்»
கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் 13-09-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் மொன்றியால் மாநகர் வாழ் திருமதி யோகநாயதி நடராஜா என்னும் பெண் படைப்பாளி அவர்களின் மேற்படி நூல்கள் வெளியிடப்பெற்றன.
அந்த விழாவிற்கு அறிஞரும் ஆங்கில எழுத்துலகில் பிரகாசிப்பவருமான சாமி அப்பாத்துரை அவர்கள் தலைமை வகித்தார்.
அங்கு சிறப்புரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் மேற்கண்டவாறு பெண்டைபபாளிகளின் எண்ணிக்கை தொடர்பாக தெரிவித்தார்.
இந்த விழா பற்றிய மேலதிய செய்திப் பதிவு நாளை இங்கு இங்கு பதியப்பெறும்
–தகவல்»- சத்தியன்
