கல்லீரலை செலலிழக்கச் செய்யும் மிக ஆபத்தான புதிய வைரஸ் ஒன்று பிரான்சில் வேகமாக பரவி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
HAV என மருத்துவத்துறையில் குறுக்கி அழைக்கப்படும் «Hepatitis A Virus» எனும் புதிய வைரசே பிரான்சில் வேகமாக பரவி வருகிறது. மிக குறுகிய நாட்களுக்குள் ஆயிரம் பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை வரு வாரத்தில் அதிகமாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உணவு, நீர் அருந்துதல் மூலம் வாய் வழியாக உடலுக்குள் நுழையும் இந்த வைரஸ் நேரடியாக கல்லீரலை தாக்குகிறது. உடனடியாக இதற்கு மாற்று மருந்துகள் இல்லை என மருத்துவத்துறை கைவிரிக்கிறது.
அதற்கு சுகாதாரமற்ற பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறும், உணவுகளை பாதுகாப்பாக வைத்து, நன்கு சூடாக்கப்பட்டு உகட்கொள்ளுமாறும், தண்ணீர் விடயத்திலும் அவதானமாக இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Nantes, Lyon மற்றும் Rhône போன்ற நகரங்களில் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் என ARS தெரிவிக்கிறது.
