நேற்றுப்
போல் யாவுமே கண் முன்னே விரிந்திட
தோற்றுப்
மாதமிதுவாச்சு.
சர்வத்தின்
கூட்டுச் சதியோடு அழிக்கப் பட்ட
தமிழினம்.
சிங்களத்தின் கபடங்களுக்கு எடுபட்ட
வல்லரசுகள்.
காட்டிக்
கொடுப்பும் துரோகங்களும் கை கோர்த்திட
அரங்கேறியது
அவலச் சாவும் சிதைக்கப்பட்ட பட்ட விடுதலையும்.
தடை
செய்ப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளும்
காலாவதியான
நச்சுத் திரவங்களாலும் தீர்கப்பட்ட
வஞ்சம்.
காற்றில்
கலந்த கந்தகத்தினால் மூச்சுத் திணறி
குஞ்சுகள் எரிந்து
கருகிய நாளே இந்த மே மாதம்.
யாவுமே
கனவு போல் நடந்தேறிட எதுவுமே
நடவாது
போன்றே நடைப்பிணங்களாய் எங்களின்
இன்றைய நகர்வு.
ஆண்டுகள்
தோறும் தோற்கடிக்கப்பட்ட மாதத்தில் கவிதையும்
கட்டுரையும்
கண்ணீர் வடிப்பும் குறிப்பாய் இதே மாதத்தில்
எங்கும்
பரபரப்பு மட்டுமே நிகழும் நீள்வது கிடையாது.
எங்களை
துடைத் தெடுத்தவன் படைத்தவன் கண்ணிற்கும்
மண்ணைத் தூவியபடி நில அபகரிப்பை
தொடர
நாமோ அடிமை வாழ்வை அணைத்தபடி.
பழி
தீர்ந்திட விழிப்போமா?
கரைந்து
போகும் மொழி காத்திட கரம் கோர்ப்போமா?
காலம்
என்றுமே எமக்காக காத்திருப்பதில்லை என்பதை
உணர்ந்தவர்களாய் விதையானோருக்கு
நன்றி உள்ளவர்களாக நிமிர்வோம் வாருங்கள்.
தயாநிதி தம்பையா.
பிரான்ஸ
