செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி கிழக்குமாகாணம் வலிந்து காணாமலாக் கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று முதல் 27.09.2025 தொடக்கம் எதிர்வரும் 01.10.2025 வரையிலுமான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
இதே போன்றதொரு போராட்டத்தினை சென்ற 25.09.2025 அன்று வடமாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பா ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு போராட்டங்களும் உள்ளக பொறி முறையை நிராகரித்து சர்வதேச நீதி வேண்டி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமாக தொடங்கியுள்ளனர்.
மேற்படிப் போராட்டத்தில் காணாம லாக்கப்பட்டோரது உறவுகள் , பொது மக்கள் , அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தகவல் சீலன்.
