Skip to content
Dezember 9, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார் – சிறிதரன் எம்.பி கடும் கவலையில்
  • தாயக செய்திகள்

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார் – சிறிதரன் எம்.பி கடும் கவலையில்

ஈழத்தமிழன் November 20, 2025
1763607486-Shritharan MP

திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எவரும் அரச அதிபர்களாகப் பதவி வகிக்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் இனப் பரம்பலை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாகச் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. 

இதனடிப்படையில் தான் அண்மையில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அது இன்று இனவாதப் பூதமாக வெளிவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன  பிக்குகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்தார். இந்த அரசாங்கமும் அதே வழியிலேயே பயணிக்கின்றது.

திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான  முறையில் புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. அது பொலிஸாரால் அகற்றப்படுகின்றது. பின்னர் பொலிஸாரால் அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. 

இந்தச் சம்பவம் குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்தச் சம்பவத்தை தேசிய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும், புத்தர் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.

https://pagead2.googlesyndication.com/pagead/ads?npa=1&gdpr=1&gdpr_consent=CQXrwgAQXrwgAEsACBENB8FgAAAAAEPgAAwIAAAR2QD-F2I2EKFEHCuQUYIYBCuACAAxYBgAAwCBgAAGCQgQAgFJIIkCAEAIEAAEAAAQAgCAABQEBAAAIAAAAAqAACAABgAQCAQQIABAAAAgIAAAAAAEQAAIgEAAAAIAIABABAAAAQAkAAAAAAAAAECAAAAAAAAAAAAAAAAAAAAAEABgAAAAAABEAAAAAAAACAQIAAA&addtl_consent=2~~dv.61.89.122.184.196.230.314.442.445.494.550.576.827.1029.1033.1046.1047.1051.1097.1126.1166.1301.1342.1415.1725.1765.1942.1958.1987.2068.2072.2074.2107.2213.2219.2223.2224.2328.2331.2387.2416.2501.2567.2568.2575.2657.2686.2778.2869.2878.2908.2920.2963.3005.3023.3100.3126.3219.3234.3235.3253.3309.3731.6931.8931.13731.15731.33931&client=ca-pub-8264061514582246&output=html&h=280&adk=590322479&adf=3858602734&w=722&fwrn=4&fwrnh=100&lmt=1763629868&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8095785795&ad_type=text_image&format=722×280&url=https%3A%2F%2Fwww.pathivu.com%2F2025%2F11%2Fblog-post_20.html&host=ca-host-pub-1556223355139109&fwr=0&pra=3&rh=181&rw=721&rpe=1&resp_fmts=3&wgl=1&aieuf=1&aicrs=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTQyLjAuNzQ0NC4xNjMiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siQ2hyb21pdW0iLCIxNDIuMC43NDQ0LjE2MyJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjE0Mi4wLjc0NDQuMTYzIl0sWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl1dLDBd&abgtt=6&dt=1763638397286&bpp=1&bdt=804&idt=1&shv=r20251118&mjsv=m202511120101&ptt=9&saldr=aa&abxe=1&eo_id_str=ID%3D03b42dc41904f53c%3AT%3D1757760652%3ART%3D1763638346%3AS%3DAA-AfjZGgs2Iu1a9wsUBQVlLRhPp&prev_fmts=0x0%2C728x280%2C722x280%2C325x250%2C325x250%2C1005x124%2C160x600%2C160x600%2C722x280&nras=6&correlator=7297742077540&frm=20&pv=1&u_tz=60&u_his=3&u_h=1152&u_w=2048&u_ah=1112&u_aw=2048&u_cd=24&u_sd=1.25&dmc=8&adx=272&ady=1762&biw=1626&bih=820&scr_x=0&scr_y=0&eid=31095753%2C31095810%2C95376242%2C95376583%2C95376711&oid=2&psts=AOrYGsmissOKppFvjkrtb_2FftET3PtQyCYOlnkWuyDuslLyVlyUNJMhAEmAN6XcWKSqVcJXJQVve7fSdPdSnEoAEkZGqVUXR4pmSwYa7V2-Zkqw_II&pvsid=844155826935035&tmod=833641971&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fwww.pathivu.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C2048%2C0%2C2048%2C1112%2C1638%2C820&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&plas=241x736_l%7C241x736_r&bz=1.25&pgls=CAA.&num_ads=1&ifi=10&uci=a!a&btvi=7&fsb=1&dtd=13

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி  பெற்றால் அனைத்துப்  பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று  எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். எனவே, சஜித் பிரேமதாஸ இந்தக் கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக்   கோரினால்தான் அது இந்த நாட்டில் ஒரு நீதியாக அமையும்.

இந்த நாட்டில் மதத்தை முன்னிலைப்படுத்தித்தான் காலம்காலமாக பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில்  இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 30 விகாரைகள் கட்டப்படுகின்றன. 

திரியாய் பகுதியில் இரண்டு சிங்களவர்களுக்காக ஒரு விகாரை கட்டப்படுகின்றது. கிழக்கில் பல இடங்களில் காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லதொழியும். இது மிகவும் அபாயகரமானது.  

ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது திருகோணமலை விவகாரம் பற்றி பேசினோம். அவரும் ஒருசில விடயங்களை ஏற்றுக்கொண்டார். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம்  தொடர்பில் ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரை நம்பிக்கையளித்துள்ளது. 

இருப்பினும் சகல விடயங்களிலும் நம்பிக்கைகொள்ள முடியாது. இந்த விவகாரத்தில்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் யாழ். தையிட்டி விகாரை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுகின்றது. ஆகவே சிலைகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுத்தேயாக வேண்டும். – என்றார்

Post navigation

Previous: தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்
Next: தமிழ் இனத்தின் விடிவுக்காய் தமதுயிரை அளி(ழி)த்தவர்கள்

Related Stories

police
  • தாயக செய்திகள்

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
IMG-20251208-WA0027 (1)
  • தாயக செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

police
  • தாயக செய்திகள்

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை 20ஆவது மைல்கல் அருகே இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (08) காலை வலான...
மேலும் Read more about வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு
தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள் baba
  • உலக செய்திகள்

தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்

Dezember 8, 2025 0
அமரர் வல்லிபுரம் திலகேஸ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் 12 (1)
  • நினைவில்

அமரர் வல்லிபுரம் திலகேஸ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்

Dezember 8, 2025 0
யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம் IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

Dezember 8, 2025 0
யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் IMG-20251208-WA0027 (1)
  • தாயக செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

Dezember 8, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

police
  • தாயக செய்திகள்

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
baba
  • உலக செய்திகள்

தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
12 (1)
  • நினைவில்

அமரர் வல்லிபுரம் திலகேஸ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
IMG-20251208-WA0077
  • தாயக செய்திகள்

யாழ்.பழைய பூங்காவிற்குள் தான் உள்ளக விளையாட்டரங்கு வேண்டும் – யாழில் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 8, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.