ஆறாத
வலிகளும் மாறாத இரணங்களும்
ஈழத்
ஓயாமல்
வதைப்பது தீராத இன்னல்களே..
இனவாதத்தின்
கோரப் பற்களினால் குதறப்பட்ட
காட்சிகளுக்கு
சாட்சிகள் ஏராளம் இருந்தும் தீர்வில்லாத
துன்பியலின் தொடர்
நீண்ட வரலாற்றின் பரினாமங்களாச்சு..
கொடூரங்களின்
வடிவங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் ஆனாலும்
கொடுமைகள்
மாறவில்லை மாற்றப்படப் போவதுமில்லை
என்பதே
மறுக்கப்படாத பேருண்மைகளாகும்..
அடிக்கடி
ஆட்சி மாறிக் கொண்டிருந்தாலும் ஆட்சியாளர்களின் மனசாட்சி
என்பது
ஈழத் தமிழனுக்கு விரோதமாகவே
என்றுமே இயக்கப்படுவது
இலங்கை அரசின் தார்ப்பரியங்களாச்சு..!
படுகொலைகள்
பாராமுகமாகவே கடந்து போகின்றது.
புதைகுழி
சமாச்சாரங்கள் வெறுமனே சித்துபாத்தில்
சித்து விளையாட்டாச்சு..
மடைமாற்றும்
கண்கட்டி வித்தைகளும் கண்துடைப்புக்களும்
வழமை போன்றே நீள்கின்றது திசைமாறும்
தலைமுறைகளும்
தடுமாறும் தமிழ் கட்சிகளும் குழப்பத்தின்
உச்சத்தில்..
விடியலுக்கான
தேவைகள் விழிமுன் விரிந்திருக்கையில்
விளக்கு
வைத்து வேடிக்கை காட்டிட விளக்கங்கள்
நடக்குது..!
விட்டுச்
சென்ற பணிகளை தொட்டு நகர்த்திட
வக்குமில்லை
வழியுமில்லை வளரும் தலைமுறைகளின் முயற்சிகளையும்
முடக்கி ஏதேதோ நடக்குது யூலைக் கலவரமும்
அது ஏற்படுத்திய வலிகளும் மறந்து தான்
போச்சு
ஈழ விடுதலையின் பயணம் விழங்காத வினாவாச்சு!
