நெதர்லாந்தில் தமிழீழதேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2024 வியாழன் Lelystad பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. 12.40மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, பின் நெதர்லந்து, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றலைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். பின் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையும் தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தின் கொள்கை வகுப்பு உரையும் இடம்பெற்றது.
பின்னர் சரியாக 13:35 இற்கு மணியொலி எழுப்பப்பட்டு தொடர்ந்து அகவணக்கமும் அதனைத்தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிக்க கனத்த இதயத்துடன் மாவீரர் குடும்பங்கள் தங்கள் உறவுகளின் திருவுருவப் படங்களிற்கு விளக்கேற்ற அதனைத்தொடர்ந்து வந்திருந்த அனைத்துத் தமிழ் உறவுகளும் அந்தத் தியாகச் செம்மல்களை மனதில் சுமந்தபடி மலர்வணக்கம் செலுத்தினர்.அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு சுமார் 18.00 மணியளவில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு பின் நம்புங்ள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதியில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.






















