மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு (08.11.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கார்த்திகை நாளில் காவிய நாயகர்களை நினைவு கூர தயாராகின்றது மட்டக்களப்பு வாகரை மாவீர்ர் துயிலுமில்லம்.
மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி விடுதலை உணர்வோடு தமிழினம் வணங்குகின்றது.
08.11.2025 மட்டக்களப்பு வாகரை மாவீரர் பணிக்குழுவினால் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்..
