பாரெங்கும் பாட்டொலி
பார்க்கும் இடமெல்லாம் புலிக்கொடி
மாமன்னன் பிறந்த நாளில்
தமிழர் மனசெல்லாம் பட்டொளி.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்களே
தலைவன் பிறந்த நாளில்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்களே.
தேசத்தின் விடியலுக்கு
விடுதலையின் விதை போட்டவனே
ஈழ தேசத்தின் விடியலுக்கு
விதை போட்டவனே நீடு வாழிய வாழியவே.
பட்ட காயங்களுக்கு
ஆறுதல் தந்தவனே
அறவழி நியாயங்கள்
தோற்றிட தோத்திட தேற்றிட
யுத்தம் ஒன்றே தீர்வென
திடம் திடம் கொண்டெழுந்தவனே
வாழிய வாழியவே.
கார்த்திகையில் அவதரித்த அற்புதனே
வல்வையில் பூத்த பெரு மகனே
பாரெங்கும் பாட்டொலி
வீதிகளெங்கும் புலிக்கொடி.
மாமன்னன் நீ பிறந்த நாளில் மனசெல்லாம் பட்டொளி.
தடைகளை உடைக்க
புலியாகி வந்தாய்
உரிமைகளை மீட்டிட அவதாரமாகி நின் போற்றும் பெரும் தலைவன் நீயானாய் வாழிய வாழியவே.
மாமன்னன் பிறந்த நாளில்
மனசெல்லாம் மத்தாப்பு. தமிழர் மனங்களெல்லாம் பூரிப்பு.
வாழிய வாழியவே..
ஆக்கம் கவஞர் தயாநிதி
