யாழ்ப்பாணம் – செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்கு தூபி மீண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் (07) குறித்த தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வாரங்களுக்கு முன்பும் குறித்த தூபியைச் சுற்றி புற்களுக்கு மருந்தடித்து சிரமதானம் செய்திருந்த நிலையில் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
இதேவேளை குறித்த தூபி இரண்டு மாதங்களுக்கு முன்னரும் விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அணையா விளக்கு தூபி புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.செம்மணியில் மனிதப் புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

