லண்டன் நோக்கி சென்ற ரயிலில் கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் 10 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 09 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டான்காஸ்டரில் இருந்து லண்டன் சென்ற கிங்ஸ் கிராஸ் ரயிலில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்குதலுக்கான நோக்கம் வெளியாகாத நிலையில், தாக்குதல்தாரி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
