ஈழமணித்திருநாட்டில் கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பளை, ஜேர்மனி Berlin, Warendorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கொக்குவிலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார். பேர்லின் தமிழாலய வளர்ச்சிக்காக (1993-2003) அரும்பாடுபட்டு பல மூத்த ஆசிரியர்களையும் மிகுதிறன் மாணவர்களையும் உருவாக்கிய முன்னாள் தமிழாலய நிர்வாகி அமரர் செல்லப்பா கந்தையா அவர்களின் துணைவியார் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போமாக:-ஓம் சாந்தி
