நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகவும் எழுச்சியாகவமும், உணர்வுபூர்வமாகவும் நோர்வேயில் நடந்தேறியது .அங்கு வந்த மக்கள் மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூறி சென்றிருக்கிறார்கள் . மாவீரர் நாள் வேலைத்திட்டங்களில் பல இளைய தலைமுறையினரும் , பொதுமக்களும் தங்களாவே முன்வந்து ஈடுபட்டு உதவி செய்வதை காணக்கூடியவாறு இருந்தது . மாவீரர் நாள் மண்டப வாசலில் இளைய தலைமுறையினருக்கான மாவீரர் கண்காட்சியும் வைக்கப்பட்டது . பலரும் அதை நின்று பார்வையிட்டு சென்றனர் .







