பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மிகப்பெரிய நாசவேலை திட்டம் ஒன்றை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு துறை முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 24 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மாகாணம் முழுவதும் உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் 364 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கைதானவர்களில் 11 பேர் சட்டவிரோதமான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ வெடிபொருட்கள், 24 டெட்டனேட்டர்கள், மற்றும் நான்கு கையெறி குண்டுகள் உட்படப் பல தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினர் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கியமான கட்டிடங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைக்குறிவைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
