#
நேற்று 04.07.2025 மதியம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ்சேனை கிராமத்திற்குச் சென்ற வனவளத் தனைக்கள அதிகாரிகள் சிலர் அங்கு இருக்கும் மக்களை மிரட்டி உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.
மேற்படி கிராம மக்கள் சுமார் எழுவது வருடங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் தாங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தங்களை எந்த அரச அதிகாரிகளும் வந்து பார்ப்பதும் இல்லை என்று முறையிடுகின்றனர்.தங்களது பதிவுகள் பால்ச்சேனை மற்றும் கதிரவெளி ஆகிய இடங்களில் பதியப்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களால் இவர்களை அங்கு சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.
அவ்வப்போது சில வேளைகளில் வனவளத் தினைக்கள அதிகாரிகள் இங்கு வந்து தங்களை இங்கு இருக்க கூடாது இது வனவளத் தினைக்களத்திற்கு உரிய இடம் என அச்சுறுத்தி வருகின்றனர் எனதெரிவித்ததோடு தாங்கள் தேன் எடுப்பதற்கு காடுகளுக்கு செல்லும் வேளைகளில் காடுகளுக்குள் இருக்கும் விசேட அதிரடிப் படையினர் தங்களைத் தாக்கி இந்தப் பரதேசங்களுக்கு வரக்கூடாதென எச்சரித்து அனுப்புவதனால் தமது வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
தங்களுக்கான தொழிலாக மீன்பிடி மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாக மழைக் காலங்களில் கச்சான் மரவள்ளி போன்ற பயிர்களை பயிரிடுவதாகவும் மற்றும் காடுகளைில் கிடைக்கும் பழங்களை பறித்து விற்றுப் பிளைப்பை நடத்துவதாகவும்.சரியான பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் தாங்கள வாழ்ந்து வருவதாகவும் கூறினர்.
தங்களுக்கு எவ்வித அடிப்படைத் தேவைகளையும் எந்த அரசாங்கமும் செய்து தரவில்லை எனவும் சென்ற டிசம்பறில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தங்கள் கிராமம் நீரினால் சூழப்பட்டதாகவும் ACT என்ற நிறுவணத்தினர்தான் படகு மூலம் வந்து தங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.
தங்கள் கிராமத்தில் 55 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இதே போல் தமது கிராமத்திற்கு அன்மையாக நாவற்குளம்
கல்லடி
சம்பக்கலப்பை போனற பல கிராமங்களில் 100 குடும்பங்கள் அளவில் வசித்து வருவதாகவும் குடிநீர் வசதி
மலசல கூட வசதி
பயிர்ச் செய்கைக்கான நீர் வசதி
வீதிப் போக்குவரத்து
வைத்திய வசதி மின்சார வசதி போன்ற எவ்வித அடிப்படைத் தேவைகளும் இன்றி இந்த மக்கள் அன்றாட தேவைகளுக்கே கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வன ஜீவராசிகள் தினைக்களம் வனவளத் தினைக்களம் ஆகியோர் அடிக்கடி வந்து தொல்லை தருவதாகவும் சில சமயங்களில் வழக்கு பதிவு செய்வதினால் நஸ்ட ஈடாக பெருந்தொகை பணத்தை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அன்மையில் பெப்ரவரி மாதம் 25 ம் திகதி இதேபோன்று கல்லரிப்புச் சேனை நான்காம்கட்டை மூன்றாம் கட்டை ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள் மக்கள் வாழ்ந்து வந்த13 குடிசைகளை எரித்துச் சாம்பலாக்கியதாகவும்.அத்துடன் தமது உணவுத் தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்த நெல்லு
பயறு
நிலக்கடலை
தேன் போன்றவற்றை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.
இவ்விடயம் தொடர்பில் வாகரைப் பொலிசாருக்கு முறையிட்டதாகவும் ஆனால் எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பிரதேச சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ,கிராம சேவகர் மற்றும் அந்த பகுதியில் வேலை செய்யும் நிறுவணங்கள் ஆகியோருக்கு தெரியப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
5.07.2025
ச.சிவயோகநாதன். மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
