இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி

0

வடக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர் இதனூடாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் (Mullaitivu ) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ யுத்த காலங்களில் தென்னிலங்கை மக்கள் வடக்கினை ஒரு யுத்த களமாகப் பார்த்தனர்.

அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் யுத்தம் ஏற்பட ஏதுவாக இருந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாதவர்களால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தற்போது, மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளித்து சேவை செய்யக்கூடிய நாடாளுமன்ற மொன்றை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதேநேரம், கடந்த காலங்களில் மக்களுக்கு எதனையும் செய்யாதவர்கள் தற்போது தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்று தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதாக கூறிவருகின்றனர்.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோருக்கு மாத்திரமே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் ” குறிப்பிட்டார்.

Schreiben Sie einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert