அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம்?
பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இந்த வார இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வரையிலான பதவி நிலைகளை வகிக்கும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள அதிகாரிகள் தொடர்பிலான பட்டியல் பொதுப்பாதுகாப்பு அமைச்சினால் தேசிய பொலிஸ் ஆணைக்கழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகள், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், வினைத்திறன் இன்றி செயற்படும் அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி பதவியிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயர் அதிகாரிகளுக்கான இடமாற்றத்தின் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என தெரியவருகின்றது.