
மதுபானசாலைகள் அனுமதி பட்டியல் இன்று(04) மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அனுர அரசு இன்று அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் பரபரப்பு தோன்றியிருந்தது.
சட்டவிரோதமாக மதுபானச்சாலை அனுமதி பெற்றவர்கள் தொடர்பில்; இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது
அவற்றில் வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் சிலர் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதான குற்றச்சாட்டில் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் இருவரும் தேர்தலில் இருந்து விலகியிருந்தனர்.
எனினும் மேலும் சில தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்புபட்டிருப்பதாக கூறப்படுகின்றது.