
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. ஏற்கனவே வான் பாய்ந்த சிறிய குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன.
இரணைமடுக்குளத்தின் 14 வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 6 இஞ்சி அளவில் 11 மாலை திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே தாழ் நிலப்பகுதி மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.