
முதல் முறையாக நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் மற்றும் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதுக்கு உட்பட்ட இளையவர்களுக்கான கிறிஸ்துமஸ் கிண்ண போட்டி 21. 22ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டித் தொடரில் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 17 அணிகள பங்கு பற்றியதோடு நேற்றைய தினம் மாலை 3:30 மணிக்கு நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் நேஸ்பி விளையாட்டு கழகம் இறுதிப்போட்டியில் பல பரீட்சை நடந்தி இருந்தது. இப்போட்டியில் ஆரம்ப முதலே இரு அணிகளும் சம பலத்துடன் தமது திறமையை வெளிக்காட்டி இருந்த போதிலும் வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்ததால் பின்னர் தண்ட உதை மூலமாக போட்டி தீர்மானிப்பதற்கு நடுவர்களால் தீர்மானம் எடுக்கப்பட்டு இரு அணிகளும் சம பலத்துடன் தண்ட உதைகளை கோலாக மாற்றி இருந்தார்கள். 10:9 என்ற கோல் அடிப்படையில் சன் பேட்ஸ் விளையாட்டு கழகம் 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் கிண்ணத்துக்கான மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது. இப்போட்டி தொடரில் சிறந்த வீரராக நேஸ்பி விளையாட்டு கழகத்தின் சுலக்சனும் இப்போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக சன் பேட்ஸ் விளையாட்டு கழகத்தின் மோகனதாஸ் பவித்ரன் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டி தொடரின் வளர்ந்து வரும் சிறந்த வீரராக சன் பேட்ஸ் விளையாட்டு கழகத்தின் துரைராஜ் சிவதர்ஷன் தெரிவு செய்யப்பட்டார்.
இப் போட்டிகளுக்கு முழு அணுசரணை மற்றும் ஆலோசனையை புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் மற்றும் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொருளாளர் டி அருள்குமார் அவர்கள் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.