
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.
சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக, மன்மோகன் சிங் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமிழீழ விடுதலை போராட்டம் தொடர்பில் இந்தியாவில் ஆட்சிகள் மாறினாலும், வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை அனைத்து தரப்புகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை காங்கிரஸ், பாஜக நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. அதாவது உள்நாட்டில் தேர்தல்களில் போட்டி போடுவதற்காக வெவ்வேறு குரல்களில் பேசினாலும், வெளிநாடுகளுடனான உறவு குறித்து ஒரே நிலைப்பாடு எடுப்பது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இதுக்கு சான்றாக 2013 காலப்பகுதியில் சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதரவாக மன்மோகன் சிங் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்வார்” என்று இனப்படுகொலையாளி ராஜபக்சேவுக்கு ‘சுருக்கமான’ கடிதம் எழுதியிருக்கிறார் காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் ஒரு நாடகம்தான்.