
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இக் கிராமம் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளதுடன் , சுத்தமான குடிநீர் இன்றியும் அவதிப்படுகின்றனர்.
பாதிப்டைந்துள்ள மக்கள்
போக்குவரத்துக்குரிய பாதைகள் சேதமடைந்து காணப்படுவதுடன்,காட்டு யானை அச்சுறுத்தலாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக அக்கிராமத்திலிருந்து வெளியேற தாம் தயாராகி வருவதாக அங்குள்ள மட்டக்களப்பு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள மக்கள் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்செய்கை, போன்றவற்றை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு மாத காலமாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இரவுப் பொழுதுகளை கழிக்க வேண்டி உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடிவெட்டை, கானந்தனை, ஆகிய பகுதி கிராமமக்களே இவ்வாறு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளும், விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.