
அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக தாதியர்கள் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிய உணவு நேரத்தில் நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ். போதனா வைத்திய சாலை முன்பாகவும், தாதியர்களல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.