
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
»இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, »OT வீதத்தை மாற்றாதே», “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.