
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் சாரதியாகச் செயல்பட்ட நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.