
ஆஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ATFIA 2025(Australia Talent and Film International Award)நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில்
சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார் திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும்,கதாநாயகமும் நடித்து வருகிறார்.
கூத்தாடி பாரம்பரிய கூத்து கலை பின்னணி கொண்ட செல்வின் தாஸ் கதாநாயகனாகவும்,
திரைப்பட நடிகை நித்யராஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா,இலங்கை,இந்தியா மலேசியா கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் முழு நீள திரைப்படம் கூத்தாடி.
தென்னிந்தியா திரைப்பட இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் எங்கும் வெளியிட தயாராகிறது …
செல்வின் தாஸ் நடிப்பிலும் தயாரிப்பிலும் தற்போது வெளிவர இருக்கும் கூத்தாடி திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ATFIA 2025(Australia Talent and Film International Award)நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில்
சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார்.