
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச பாடலாசிரியர் சங்கம் (International Singer Songwriters Association) 2025 ஆம் ஆண்டுக்கான விருது தேர்வை நடத்துகிறது.
இந்த தேர்வில் சர்வதேச பிரிவில் பொத்துவில் அஸ்மினின் பாடல் “முட்டக்கண்ணி” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீதர் மாஸ்டர், காயத்ரிசான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர்ஸ்ரீகாந்தேவா இசையமைக்க ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர் முல்லைசசி பாடியுள்ளார்.
இலங்கையில் உருவாக்கப்பட்ட தமிழ்பாடல்களில் அதிக பார்வையினை பெற்ற «அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்» பாடல் மூலம் உலகம் எங்கும் கவனம் பெற்ற பொத்துவில் அஸ்மின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் (International Male Songwriter of the Year) விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.