ஈழத்தில் அரைநூற்றாண்டையும் தாண்டி பயணிக்கும் அருணா இசைக்குழுவின் ஸ்தா பகரும் மூத்த இசைக் கலைஞருமான அருணா என
அழைக்கப்படும் சுப்பையாஅருணாசலம் தனது 79வது வயதிலும் இன்றுவரைதொடர்ந்து இசைத் துறையில் பயணித்து வருகிறார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுப்பையாவுக் கும் வேலணையை சொந்த இடமாக கொண்ட சிவக் கொழுந்துவுக்கும் பிறந்த எட்டுப் பேரில் ஆறாவதாக
1946இல் வேலணையில் பிறந்த அருணா சிறுவயதி லேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் இசையை கற்பித் ததந்தையின் இசை பின்னணிஅருணாவிடமும் ஒட் டிக்கொண்டது. தந்தையின் ஹார்மோனியத்தை வாசிக்க தொடங்கியஅருணா சர்வேஸ்வரசர்மா,
சண்முகானந்தம், டிவிபிச்சையப்பாஎனபலரிடம் வயலின் இசைக்கபயின்றார்.
தந்தையிடம் இருந்த ஹார்மோனியத்தையும் இசைக்கபழகிக்கொண்டார்.சின்னவயதில் இசை நிகழ்ச்சிகளுக்குசெல்லும் அருணா சின்ன மேள நிகழ்ச்சிகளுக்குசென்று வாசித்துள்ளார். அருணா
தனது 5ம் ஆண்டு ஆரம்ப கல்வியை தட்டாதெரு குளங்கரை பாடசாலையில் பயின்றதுடன் யாழ்ப்பா ணம் இந்துக் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி,
கல்வியங்காடு சாதனாபாடசாலைகளில் சாதாரண தரம் வரை கற்றார். இசை நிகழ்வவுக்கு செல்ல ஆரம் பித்ததனால் பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டார்.
முதன் முதலில் ஹார்மோனியம் இசைக்ககற்ற அருணா வில்லுப்பாட்டுகச்சேரிகளில் மேற்கொள்ள ஆரம்பித்தார்.1960ம் ஆண்டளவில் அருணா, பாட சாலை இசைநிகழ்வுக்குசெல்லஆரம்பித்தார்.அத னால் பாடசாலைகல்வியை இடையில் கைவிட்ட பிறகு பல நிகழ்ச்சிகளுக்கு சென்றார். கண்ணன் கோஷ்டி, இரட்டையர் கோஷ்டி யாழ்ப்பாணத்தில்
ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் 1967 கல்வியங்காட் டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி மூலம் அருணா இசைக் குழுவின் அத்தியாயத்தை ஆரம்பித்தார். அது அருணா வுக்குதிருப்புமுனையைஏற்படுத்தியது.
அதன்பின் பலரும் அருணாவையும் அவரது குழு வினரையும் இசைநிகழ்ச்சிகளுக்குஒப்பந்தம் செய்த னர். தொழில்நுட்பம் வளராத காலத்தில் இலங்கை முழுவதும் எனஅவரதுபெயர் பரவி இருந்தது.யாழ்ப்
பாணத்தில் அருணா போகாத கோவிலே இல்லை என சொல்லலாம்.
1967ம் ஆண்டு 300 ரூபாய்க்கு கச்சேரி மேற்கொள்ள ஆரம்பித்தஅருணா இசைக்குழுவின் பயணம் இன்று வரை தொடர்கிறது.
அருணாசலம் 1971ம் ஆண்டு விமலாவதியை காத லித்து திருமணம் செய்தார். 1984 யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் அருணா யாழ் மாநகரசபையிலும் பணி
யாற்றினார். பகல் மாநகர சபை வேலை இரவு இசை நிகழ்ச்சி என அவருடைய பணிகள் நகர்ந்தது.
யுத்த காலத்தில் இசை நிகழ்ச்சி நடத்த முடியாத சூழலில் தமிழீழ எழுச்சிப் பாடல்களையும் அருணா பாடத் தவறவில்லை. மானமொன்றே வாழ்வென
கூறி, சிறீமாட்சி பெற்றெடுத்த சந்திரிக்காவே, ரத்தத்திலே சிவந்த மண்ணே என பல பாடல்கள் உண்டு.
1993 ம் ஆண்டு இயக்கப் பாடல்களை பாட ஆரம் பித்தார்.
பாடகர் சாந்தன், சுகுமாரன், கனகாம்பாள், பார்வதி சிவபாதம், அமுதன் அண்ணாமலை, ரங்கன், உள்ளிட் டபலரும் அருணாவின் ஆரம்பகால இசைகுழுவில் பணியாற்றியுள்ளனர்.
முல்லைத்தீவு கலைஞர்கள் உருவாக்கிய தமிழோசை படத்திற்கு இசையமைத்ததற்காக அருணாவிற்கு விடுத லைப் புலிகளின் தலைவர் நேரில் அழைத்து கௌரவித் திருந்தமைவிசேடஅம்சமாகும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து போகும் 1996 வரை சில ஆண்டுகள் புலிகளின் குரலிலும் அருணாபணியாற்றினார்.
ஒரே நாளில் இரண்டு மூன்று இசை நிகழ்ச்சிகளை யும் சளைக்காமல் மேற்கொண்டு மக்கள் வரவேற்பை பெற்றவர். புலம்பெயர் நாடுகளிலும் அருணா தனது இசை பயணத்தில் தடம் பதித்தார்.
அருணாவுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். மூன்று பேர் இசைக்கலைஞர்களாக உள்ளனர்.அருணா இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது தனது மகன்களை
யும் அழைத்து வருவார். இயற்கை ஞானத்தால் அவர் களும் இசையைபயின்றார்கள்.
அருணா இசைக்குழுவை ஆரம்பித்து பெயர் சொல் லும் ஒன்றாக இன்றுவரை வளர்த்த அருணாவுக்கு வயதான போதும் தளராமல் இசை பயணத்தை இன்று வரை தொடர்ந்து வருகிறார்.
