சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நேற்று நடைபெற்றது. சுகிர்தராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்பு இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. சுகிர்தராஜனின் திருவுருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
