January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

கலாபூசணம் விருது பெற்றார் கரவை”கந்தப்பு அவர்கள்.

வவுனியாவை சேர்ந்த பழம்பெரும் இசைக்கலைஞரும், மெல்லிசைப் பாடகரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமாகிய கரைவையூர் கந்தப்பு வல்லிபுரம் அவர்களுக்கு,

12.01.2026 அன்று கொழும்பு அலரிமாளிகையில் நடைபெற்ற விழாவிலே,

இசைத்துறைக்காக கலாபூசணம் விருதை வென்று, வடமாகாணத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் கலா பூசணம் கந்தப்பு அவர்கள்.

இவர் தனது பிள்ளைகளையும் இசைத்துறையில் சிகரம் தொடுவதற்கு மிகவும் உந்துசக்தியாக திகழ்ந்துள்ளார்.

மூத்த புதல்வர் மிகச்சிறந்த இசையமைப்பாளரும் பாடகரும், பாடலாசிரியரும், நடிகருமான, இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள்.

இளைய புதல்வர் மதுரக்குரலோன் சக்தி சூப்பர்ஸ்ரார் கந்தப்பு ஜெயரூபன் அவர்கள்.

புதல்வி மிகச்சிறந்த பாடகி என்று எல்லோராலும் போற்றப்படும், ஈழத்து இசை அரசி கந்தப்பு ஜெயபிரதா கஜன் அவர்கள்.

இவர்களது இசைப்பயணம் மென்மேலும் சிறப்படைய நாமும் இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்..!

Loading

About The Author