யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மீனவர்கள் இருவரும் வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், கடலுக்குள் சென்று தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையிடமும் , கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை (02) அன்று கச்சதீவுக்கு அருகாமையில், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் இரு மீனவர்களையும் கண்டதாக இந்திய மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கியதாகவும் இந்திய மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளிப்பது குறித்த தகவல்கள் தெரிந்தும், அரசாங்கம் அவர்களை தேடி மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கும் தகவல் வழங்கினோம். ஆனால், ஆறு நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு தேடுதல் நடவடிக்கையோ அல்லது பதில்களோ எமக்கு கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயிருந்த மீனவர்கள் கச்சதீவு கடலில்!