
காலைக் கதிரவனே எழுந்துவா பொங்கலிட
கண்பறிக்க ஒளிவீசி எம் முன்னே நீ வருக -இன்
இந் நாளை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்தோம்
இனிய பொங்கலிட்டு உனக்காகப் படைத்திடவே!
வெடிகள் ஓசை தான் ஒலிக்கா வெண்பாலில் பொங்கலிட
வறியதும் பெரியதும் என்று வரம்புகள் பாராமல்
வாசலில் கோலமிட்டு வயல் விதைத்த நெல் எடுத்து
வாஞ்சையுடன் வரவேற்கும் தைப்பொங்கல் திருநாளே! நீவருக
நமக்கின்ப ஒளிதருக:
மாவிலைத் தோரணங்கள் மலர்கொண்டு மாலைகளும்
மங்கல நாதஸ்வரப் பாடல்களும் காதொலிக்க
நாடி உறவுகளைத் தேடியே சொந்தங்களை
கூடி உண்டு மகிழும் திருநாளாய் நாள் எல்லாம் நீ வருக!
நமக்கின்ப ஒளிதருக:
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (14.01,2026)
![]()

More Stories
2027 தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மரைன் லு பென்