ஒப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் (Operation Southern Spear) – சட்டவிரோத எண்ணெய் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அமெரிக்கா!
மேற்கு அரைக்கோளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணைந்து முன்னெடுக்கும்
திட்டத்தின் கீழ் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி, கரீபியன் கடல் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட ‘மோட்டார் ராங்கர் வெரோனிகா’ (Motor/Tanker Veronica) என்ற கப்பலை அமெரிக்கப் படைகள் இன்று அதிகாலையில் சுற்றி வளைத்தன. எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது.
இந்த அதிரடித் திட்டத்தில் USS Gerald R. Ford (CVN 78) போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட கடற்படை வீரர்கள் (Marines and Sailors) மற்றும் கூட்டுப் பணிக்குழு (Joint Task Force Southern Spear) பங்கேற்றனர்.
இவர்களுடன் USS Iwo Jima (LHD 7), USS San Antonio (LPD 17), மற்றும் USS Fort Lauderdale (LPD 28) ஆகிய அதிநவீன போர்க்கப்பல்கள் முழுமையான பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்கின.
இந்த நிலையில் வெனிசுலாவில் இருந்து முறையாகவும், சட்டபூர்வமாகவும் ஒருங்கிணைக்கப்படும் எண்ணெய் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். மற்ற அனைத்து சட்டவிரோத முயற்சிகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடுகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத வர்த்தக நெட்வொர்க்குகளைத் தகர்க்கவும் இந்த ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நாட்டின் பாதுகாப்பே எமது முதன்மை நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
![]()

More Stories
காசா அமைதி சபைக்கு டொனி பிளேயர் மற்றும் மார்கோ ரூபியோ நியமனம்
அமெரிக்கா எச்சரிக்கை சீனக் கார்கள் கனடாவுக்குள் அனுமதிப்பதற்கு கனடா வருத்தப்படும்
ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை ..