அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை – அமெரிக்கத் தூதரகம் 23/10/2024 மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால் முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
- வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!
- பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
- கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்
- கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !
