யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணம் திறந்த நீதிமன்றத்தில் செம்மணி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்டது.
இந்தநிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தனது இலங்கைக்கான பயணத்தில் செம்மணி புதைகுழி அகழ்வுப்பணிகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geographic Reference