ஜெர்மனியின் Herne நகரில் 13.03.2026 – 15.03.2026 வரை நடைபெற்ற பரதநாட்டிய போட்டி மிகச் சிறப்பாகநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்த *தமிழ் பெண்கள்* அமைப்பிற்கு எங்களது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.![]()
இவ்வளவு பெரிய அளவிலான கலை நிகழ்வை திட்டமிட்டு, நேர்த்தியாக, எந்த குறையும் இல்லாமல் நடத்துவது என்பது மிகுந்த உழைப்பும், ஒற்றுமையும், அர்ப்பணிப்பும் தேவைப்படும் ஒன்று. அந்த அனைத்தையும் மிக அழகாக இணைத்து, கலைக்கு உரிய மரியாதையுடன் இந்த நிகழ்ச்சியை உயர்ந்த தரத்தில் கொண்டு சென்றுள்ளீர்கள்.
இந்த மேடையில் நாங்கள் நடுவராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமையாகும். ஒவ்வொரு மாணவரும் அருமையான அர்ப்பணிப்புடன் மற்றும் ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் ஆசிரியர்கள் காட்டிய உழைப்பு மற்றும் பயிற்சி மிகுந்த பாராட்டுக்குரியது.
எல்லா ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கலைப்பயணம் தொடர்ந்து வளர்ந்து, இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறோம்.![]()
