கொனிபா ஆசியக்கிண்ணம்.
இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் 05.06.2026 அன்று
தமிழீழம் எதிர் கிழக்கு துருகிஸ்தான்
இங்கிலாந்தில் இடம்பெற்றதில் தமிழீழ அணி வெற்றி பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளது,
ஈழத்தமிழினம் விடிவுக்காக போராடி ஒரு முடிவின்றிப் போனாலும் உலகம்வாழ் தமிழ் இனம் தூங்காது நிமிர தேசியக்கொடி விளையயாட்டுக்களத்தில் நிமிர்ந்து நிலை கொண்டு நின்றது மட்டுமல்ல எமது மக்களின் ஊக்கிவிப்பும் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்தது.
இதில் தங்கள் விளையாட்டு ஆளுமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும், இதற்கான செயல் பாடுகளை ஒன்றிணைந்து செயல் படுத்திய அனைவருக்கும் ,பார்வையாளர்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்
தலை நிமிர்வோம் தரணியில நாம் உயர
தடைகளை தகர்த்து ஈழத்தமிழினமாம் -நாம்
உலகினிலே உயர்வு கொள்ள
உலகறிய உணர்வு கொண்டு
சானைத் தலைவன் தந்த பணி நிறைவேற்ற
சமுதாய உணர்வு கொண்டு.
தகவல் -கலையழகன் ஊடக இணைப்பாளர் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி :
