,இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் மாமனிதர் கௌரவ மாவை சோ. சேனாதிராஜா அவர்களின் உருவச் சிலை திறப்பு விழா
- மாமனிதர் கௌரவ மாவை சோ. சேனாதிராஜா: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (1989-2022).
- பிறப்பு: 27-10-1942
- மறைவு: 29-01-2025
- சிலை தமிழ் அரசியல் தலைவர் மாமனிதர் சேனாதிராஜா அவர்களின் உருவச் சிலை திறப்பு விழா 31.01.2026 31.01.2026 .
- திறந்து வைப்பவர்கள்:
- உயர்திரு. நா. வேதநாயகன்: கௌரவ ஆளுநர், வடமாகாணம்.
- கௌரவ ந. நல்லுசாமி: முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு.
- உயர்திரு. சாய் முரளி: கௌரவ இந்தியத் துணைத் தூதுவர் – யாழ்ப்பாணம்.
- “தமிழையும், தமிழினத்தின் எழுச்சியையும் தன் உயிர்மூச்சாக நேசித்து, அவற்றுக்கு மகத்துவம் சேர்த்த மாபெரும் மக்கள் தலைவர்!”
- எமது இனத்தின் தனித்துவத்திற்காகவும், உரிமைக்காகவும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஓயாது குரல் கொடுத்த மாமனிதர் அண்ணர் மாவை சோ. சேனாதிராஜா அவர்கள், எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் ஏற்றி வைத்த லட்சியச் சுடர் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
- அவர் விட்டுச் சென்ற அந்த விடுதலைப் பயணத்தையும், இனப்பற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அண்ணாரின் இலட்சியங்களை நெஞ்சில் ஏந்தி மக்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டிய தருணம் இது. உருவச்சிலை திறப்பு விழாவில் அனைவரும் இணைந்து கொண்டு அவருக்கான மரியாதை செலுத்த கொள்வோமாக
- .

