–
வீ.ஆனந்தசங்கரி
இலங்கை சனசமசமஜாக் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த வர். இடதுசாரி இயக்கமுன்னோடிகளில் ஒருவரான என்எம் பெரேராஉடன் நெருங்கிபழகியவர்.
அவர் முதலில் கிளிநொச்சியில் தேர்தலில் நிற்க முற்பட்டபோதுஅங்கு ஏன் செல்கிறாய் யாழ்ப்பா ணத்திலேயே தேர்தலில் நிற்கலாமே என அவரது
தாயார் வினவியதாகஅவர் சொன்னஞாபகம்.
அந்நாட்களில் 1950,60களில் கிளிநொச்சி அதன் சுற்றயல் பிரதேசங்கள் சமூக பொருளாதார பிரச்ச னைகள் சொல்லிமாளாதவை.
சங்கரி அவர்கள் அப்பிரதேசங்களின் வளர்ச்சிக் காகதன்னைஅர்ப்பணித்திருந்தார்.
ஊராட்சி நகராட்சி என அவரது சமூகஅரசியல்
பயணம் நெடியது.
கிளிநொச்சியை தனிமாவட்டம் ஆக்கியதில் அதன் சமூகபொருளாதாரகல்விவளர்ச்சியில் ஒரு பாய்ச்சல் ஏற்படுவதற்கான அத்திவாரம் அவரால் இடப்பட்டது என்றால் மிகையல்ல.
ஆசிரியராக தனது பணியைஆரம்பித்த அவர் இரத்மலானை இந்துகல்லூரியில் கல்வி கற்பித்த காலத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவ ஹர்லால் நேருஅவர்களைவரவேற்கதனது மாணவர் களை விமான நிலையத்திற்குஅழைத்துச் சென்றவர்.
கொழும்பு சாகிரா கல்லூரியில் கல்வி கற்ற காலத் தில் இலங்கையின் பன்முகப்பாங்குடனான ஒரு ஆளு மையாகதன்னைஅவர் உருவாக்கிக் கொண்டார்.
அவரது கிளிநொச்சி வீடு காரியாலயம் எப்போ தும் பூட்டப்படுவதில்லை என்று கூறுவார்.
இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பிரகா சிக்கும் பலர் சங்கரி அவர்களை நன்றியுடன் நினைவு கூருவார்கள்.
ஆனந்தபுரி என்ற பெயர் இந்த பேரவல யுத்தகா லத்திலும் கிளிநொச்சியில் அழிந்து போகவில்லை என்றால் அதற்குகாரணம் கிளிநொச்சி அதன் சுற்றயல் மக்களின் மனங்களில் அவர் இருந்தார்.
வடக்கில் சாதியம் போலவே பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நிலவியகாலத்தில் அவர் பிரதேசங் களின் சமத்துவத்திற்காக நின்றார்.
நாடு தழுவிஅளவில் அவர் இனங்களின் சமத்து வத்திற்காக செயல்பட்டார்.
சக சமூகங்களின் இன்பதுன்பங்களில் எப்போதும் பங்குபற்றினார்.நெற்றிக்குநேரேவிடயங்களைச் சொல் லும் ஆளுமை.
இலங்கையின் சகல இனமத அரசியல் தலைவர்கள் சமயதலைவர்கள் ஊடகவியலாளர்கள் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் உற்சாகமான மனிதர் அவர்.
அவரது வாழ்க்கையில் சாகசங்களும் உண்டு.
1960களில் அவர் இங்கிலாந்தில் இருந்து காரில் ராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு பயணித்தவர்.
இந்திய முறையிலானஅரசியல் தீர்வை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர்.
தமிழக அரசியல் தலைவர்களுடனும் சிறந்த பரிச் சயத்தை வைத்திருந்தவர். கலைஞர் கருணாநிதி, குமரி அனந்தன், மபொசி போன்ற மறைந்த தலைவர்களுட னும் இந்து பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ராம் போன்றவர்களுடனும் உறவை பேணியவர்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விவிகிரி இலங்கைக்கான இந்தியாவின் தூதுவராக வும் பணியாற்றியவர் அவரை அழைத்து தென்னிலங் கையில் தான் இளைஞராக இருந்தகாலத்திலேயே சில கலந்துரையாடல்களை நிகழ்த்தியவர்.
மறைந்த இந்திய பிரதமர்களான ஐகேகுஜரால், மன்மோகன் சிங் போன்றவர்களை சந்தித்திருக்கிறார்.
தவிர தென்னாபிரிக்காவின் டெஸ்மன் டூடு போன் றவர்களையும் சந்தித்து எமது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்திருக்கிறார்.
1994 இல் சந்திரிகாஅவர்கள் பதவிக்குவந்ததன் பின்னர் 1997 இல் வடக்கில் உள்@ராட்சி தேர்தல்கள் நடைபெற்றபோதுமறைந்தசரோஜினி யோகேஸ்வரன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்த கெடுபிடி யான காலத்தில் ரத்மலானை விமான நிலையத்தில் காத்திருந்தது ஞாபகத்தில்.
எந்த ஜனநாயக இடைவெளியும் இல்லாத காலத் தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை மீளகட்டி எழுப்புவதற்கு அவர் முன் கை எடுத்தார்.
சரோஜினி, சிவபாலன், மதிமுகராசா என தனது சகாக்கள் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டு செத்துவிழுந்து கொண்டிருந்தபோது தற்கொலை குண்டுதாரிகள் வெடிமருந்துவீச்சம் துப்பாக்கிச் சன் னங்கள் பறக்கும் தெருக்களில் இரங்கல் கூட்டங் களை நடத்தினார்.
போவதே சாத்தியப்படாது என்ற நிலையில் திருமலை தங்கத்துரை அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர். சித்தார்த்தன் அவர்களும் நானும் அவருடன் பயணித்தோம்.
திருமலைநகர சபை தலைவராக இருந்த, பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சூரியமூர்த்தி அவர்களும் தனதுபிற்காலகட்டத்தில் ஆனந்தசங்கரி அவர்களுடன் இணைந்து வேலை செய்தார்.
சந்திரிகாஅவர்களின் காலத்தில் யாழ் நூலகம் மீள புனரமைக்கப்பட்டபோது அதனை முன் நின்றுசெயல் படுத்துவதில் முனைப்புகாட்டியவர்.
எப்போதும் மக்களை இருளிலேயே வைத்திருக்க வேண்டும் என்றுகருதியவர்கள் எரிந்தநூலகம் அப் படியேஞாபகச் சின்னமாக இருக்கவேண்டும்.அதனை புனரமைக்க கூடாது என்றார்கள்.
யாழ் சமைய சமூக நீதி மறுப்பு அதிகார வர்க்கத்தின் முகம் சுளிப்பு முணுமுணுப்புக்கு மத்தியில் செல்லன் கந்தையா அவர்களையாழ் நகர மேயர் ஆக்குவதற்கு முன் நின்றவர்.
அவரது எதார்த்தமான அரசியல் நிலைப்பாடுகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஆழமான பிளவை ஏற்படுத்தியது.
தமிழர் விடுதலைக் கூட்டணிஎன்றதனதுகட்சியின் பெயரைதக்கவைப்பதற்காகஅவர் நீதிமன்றத்தில் சளைக்காமல் முயற்சிசெய்தார்.
லங்கா சமசமாய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலை கூட்டணியெனநெடும் பயணம் அது.
ஜனநாயக விரோத அரசியல் நிலைப்பாடுகளுக்கு கட்சியின் ஒருபகுதியினர் நெகிழ்வுத் தன்மை காட்டி யதால் தவிர்க்கமுடியாதபிளவுஏற்பட்டது.
இளைஞர்களுடன் சாமானியமனிதர்களுடன் இயல்பாகப் பழகும் இயல்புஅவரிடம் இருந்தது. தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய ஜனநாயகவிரோத அரசியலை அவர் தயவு தாட்சண்யம் இன்றி விமர்சித் தார்.
இதனால் தான் புலிகளின் ஆலோசகர் லண்டனில் பகிரங்க மேடையில் ஆனந்தசங்கரி அவர்களை ஆபா சமாக வசவுசெய்தார். சங்கரி அவர்கள் அவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
ஆசிரியராக, சட்டத்தரணியாக, அரசியல் தலைவ ராக, மனித உரிமை ஜனநாயகவாதியாக மக்களின் சமூக பொருளாதார விடயங்களில் கரிசனை கொண்ட வராக பல பரிமாணங்கள் அவரிடம் இருந்தன.
காந்திய எளிமை அவரது வழி. அவரது ஜனநாயக அரசியல் செயற்பாட்டுக்காக பிரான்ஸ் தலைநகர் பரி சில் வைத்து யுனெஸ்கொவின் ‘சகிப்புத்தன்மைக்கான’ சர்வதேச விருது வழங்கப்பட்டது.
தனது எழுபதாவது அகவைக்கு பிந்திய முதிய வய தில் அவர் குறிப்பாக இனப் பிரச்சனைக்கான தீர்வு சமூகங்களுடைய சகோதரத்துவம் மனித உரிமை ஜன நாயகம் மக்களின் ஜீவாதார நலன்களை பிரதிபலிக் கும் கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர்.
1989இல் படுகொலை செய்யப்பட்ட தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதற்கு முதுகெலும் பற்ற வர்களாக அவரது கட்சி யினர் இருந்தகாலத்தில் தங்க முகுந்தன் மற்றும் கட்சியின் ஜனநாயகவாதிகளின் பங்களிப் புடன் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் அஞ்சலி கூட் டதi; த நடத்தியவர். இன மதம் பேதம் கடந்து மண் டபம் நிறைந்திருந்தது.
அமிர்தலிங்கம் ஒரு சகாப் தம் என்ற நூலையும் புதிது ஒரு நூலையும் வெளியிட்டுவைத் தார்.
தமிழ் அரசியலபரப்பில் துரோகபட்டம் சூட்டப் பட்ட தீண்டாமை பாராட்டப்பட்ட எந்த அரசியல் இயக்கத்துடனும் சேர்ந்து இயங் குவதில் தயங்கிய தில்லை.
துரோகியாக இருட்டடிப்பு செய்யப்பட்ட தலை
வர் அமிர்தலிங்கத்தை முன்நிறுத் தியவர்.
கிளிநொச்சியில் அடிநிலை மக்கள் மத்தியில்
வேலைசெய்த பொதுவுடைமை இயக்கத் தோழர்க
ளுக்கும் அவர் மீதுநன்மதிப்பிருந்தது.
ஒருவீரியமிக்கஆற்றல் உள்ள இளைஞனைப் போல
அவர் உறவுகளைபேணியவர்.
1990 களின் பிற்பகுதியில் இருந்து2009 வரைதென்
னிலங்கை அரசியல் சமூகசக்திகள் உடனும் தமிழக
ஜனநாயக இடது சக்திகள் உடனும் புலம்பெயர் முற்
போக்கு ஜனநாயக அணிகளுடனும் உறவைபேண
முடிந்தது.
குறிப்பாகமறைந்த தோழர் ஸ்ருட்கார்ட் ஜெமினி யின் இணையமும் சங்கரிஅவர்களின் பங்களிப்பை முன்னிறுத்துவதில் குறிப்பிடத் தகுந்தபணியாற்றியது.
நெருக்கடி மிகுந்த காலத்தில் சங்கரிஅவர்களின் உறுதியான நிலைப்பாடுகள் செயல்பாடுகள் தோழர் சுபத்திரன் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டது.
ரவிராஜ் போன்ற இளைஞர்களையும் சமூகநீதி மறுக்கப்பட்டப pன்புலத்திலிருந்துவந்தசெல்லன் கந்தையா போன்றவர்களையும் மாநகர சபை ஊடாக முன்னரங்குக்கு கொண்டுவருவதில் எந்ததயக்கமும் காட்டவில்லை.
இறுதியுத்தநாட்களில் கிட்டத்தட்ட 85 ஆயிரம் பேர் வரை அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்திருந்த போது மூன்றரைலட்சம் பேர் வரையில் வன்னியில் இருந்ததாக கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன் னார் அரசு அதிபர்களின் தகவல்களை, முன்வைத்து அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வினவியபோது புனர்வாழ்வுத் துறை அதிகாரியாக இருந்ததிவாரட்ண, பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கடுமையாகவாய் தர்க்கமேற்பட்டது. இடதுசாரிதலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டஅந்த கூட்டத்தில் ஆனந்த சங்கரிஅவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஒருநாள் அவர் தொலை பேசியில் அழைத்து “எங்கட சனங்கள் எல்லோரை யும் கொல்லப் போறாங்கள்” என்றார். அந்த நாட்க ளில் வன்னியில் இருந்த வைத்தியர்களிடமிருந்து அவருக்கு தொலை நகல்கள் வந்துகொண்டிருந்தன.
நான் தொலைபேசியில் எதையும் பேசவேண்டாம் என்று சொன்னேன் ஆனால் அவர் கேட்டால் கேட்டு விட்டுப் போகட்டும் என்றார் அலட்சியமாக. அந்நாட்களில் மிகுந்த விசனமும் கோபமும் கொண்டிருந்தார்.
தமிழ கூறும் நல்லுலகில் ஆசாடபூதிகளான தலை வர்களுக்கு இருந்தமரியாதைமனசாட்சி கொண்ட வெளிப்படையானமனிதர்களுக்கு இருக்கவில்லை அவர்கள் துரோகிகள்!?
அவர் போன்றவர்கள் பிற்காலத்தில் அரசியல் அதி காரத்தைஅடையமுடியாமல் போனதற்கு என்னகார ணம் என்பதுவிளங்கிக் கொள்ளப்படவேண்டும் .
இங்கு போலிகள் மதிப்புமிக்கவை.
கடைசியாக ஒன்று 1975 துரோகியாக கொல்லப் பட்ட அல்பிரட் துரையப்பாஅவர்களுடன் தனக்கி ருந்தநெருக்கத்தைப் பற்றியும் அவரது நல்லியல்பு களைப் பற்றியும் அவர் என்னிடம் உரையாடியது ஞாபகம்.
பல்வேறுமனிதர்கள் பற்றியும் திறந்த மனதுடனான சுயாதீனமானபார்வை இருந்தது.
தீண்டாமை இருந்தது இல்லை.
சூறாவளியின் ஊடு நெடும் பயணம் மேற்கொண்ட முதுபெரும் தலைவர் அவர். நீடுவாழ்க.
– சிறிதரன் திருநாவுக்கரசு (சுகு)
